இடையே விதி விளையாடி, அவன் முதல் மனைவியின் மகனே அவனிடம் வேலைக்காரனாகப் பணிபுரிய வருகிறான். இறுதியில் மகனும் தந்தையும் ஒன்று சேரு கின்றனர்.
சிவாஜியின் பாத்திர அமைப்பும், நடிப்பும் தனிச்சிறப்புப் பெற்று விளங்குகின்றன. வெறுப்பையும், அன்பையும் சேர்த்துக்காட்டி நடிக்க முடியுமா? சிவாஜியால் முடியும்! உதாரணத்திற்கு ஒன்று... "இந்தக் குடும்பம், எங்க குடும்பத்துக்கிட்டே இருபது வருஷமா அடிமையா இருக்காங்களாம்! பிளடிஃபூல்ஸ்!" என்று சுந்தர்ராஜனைத் திட்டும் காட்சி.
இயற்கையான நடிப்பு என்ற சொற்களெல்லாம் இனி சிவாஜிக் குப் போதாது போலும்! காரசார மான சாப்பாட்டை அவர் சாப் பிடும்போது, நம் கண்களிலும் கண்ணீர் வருகிறது.
சௌகார் ஜானகி, இப்போது வரும் பல இள நடிகைகளைவிட அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார்.
நடிப்பில் இரண்டாவது பரிசுக்கு அசோகனும் சௌகார் ஜானகியும் போட்டி போடுகிறார்கள்.
நகைச்சுவைக் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவைத் தருகின்றன. "இங்கிலீஷில் சாயத்துக்கும் டை, சாவதற்கும் டை என்கிறார்களே!" என்று வி.கே.ராமசாமி அழகாக அலுத்துக் கொள்கிறார்.
'அந்த நாள் ஞாபம் நெஞ்சிலே' என்ற வசன கவிதை புதுமையாக இருந்ததும், ஏனோ ரசிக்கும்படி யாக இல்லை. பின்னணி சப்தம் அதிகமாக இருப்பதுதான் கார ணமோ?
உயர்ந்த மனிதன் உள்ளத்தைக் கவருகிறான்.
நன்றி விகடன் : 15 /12 /1968