Friday, October 15, 2010

தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த நாளான இன்றைய தினத்தை (அக்டோபர் 15) ஐக்கிய நாடுகள் சபை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் பிறந்து திருச்சி, சென்னை உள்ளிட்ட இடங்களில்  கல்வி கற்று  நாட்டின் தலை சிறந்த அணுவியல் அறிஞராகவும், தொலைநோக்கு சிந்தனையாளராகவும் திகழும் அப்துல் கலாம் இந்திய குடியரசுத் தலைவராக மிகச்சிறப்பாக பணியாற்றினார்.  இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்களுக்கு முன்மாதிரி தலைவராக திகழும் அப்துல் காலம் உலகம் முழுவதும் இதுவரை 1 கோடி மாணவர்களை சந்தித்து உரையாற்றிவுள்ளார்.
 
மாணவர்கள் எதிர்காலத்தில் எப்படி வாழவேண்டும், நாட்டுக்கு எவ்வகையில் கடமையாற்ற வேண்டும் என்று தொடந்து திட்டங்களை வகுத்து, விளக்கம் கொடுத்து, எளிமையாக உரையாடி ஊக்கப்படுத்தி வரும் அப்துல் கலாம் போற்றப்படும்  உலகத் தலைவர்கள் ஒருவராக திகழ்கிறார். 
 
இந்நிலையில் அவரின் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் தேதியை உலக மாணவர் தினமாக அறிவித்துள்ள ஐ.நா. சபை அதிகாரப்பூர்வமாக உலகம் முழுவதும் இந்த நாளை மாணவர் தினமாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது. 
 
இந்த அங்கீகாரம் இந்தியாவின் தலைவர் ஒருவருக்கு இதுவரை கிடைக்காத ஒரு சர்வதேச ஒரு சிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.  
நன்றி : தினமலர் 

Monday, October 11, 2010

அமெரிக்காவை அசத்தும் ஆச்சரியத் தமிழர்

கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் கே.ஆர். ஸ்ரீதர் – இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர். இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொன்டிருக்கிறது. இதில் பெருமைக்குரிய விஷயம், இவர் ஒரு தமிழர் என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? : திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து முடித்தவுடன் அமெரிக்காவில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் நியூக்ளியர் என்ஜினீயரிங் படித்து விட்டு, அதே பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டமும் பெற்றார் ஸ்ரீதர். மிகப் பெரிய புத்திசாலியாக இருந்த இவரை நாசா அமைப்பு உடனடியாக வேலைக்கு எடுத்துக் கொண்டது. அரிசோனா பல்கலைக் கழகத்தில் உள்ள ஸ்பேஸ் டெக்னாலஜீஸ் லேபாரட்டரியின் இயக்குநராக அவரை நியமித்தது. செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா? அதற்குத் தேவையான சாத்தியக்கூறுகளைக் கண்டுபிடிப்பது எப்படி? என்பது பற்றி ஆராய்ச்சி செய்வதே ஸ்ரீதரின் வேலை. முக்கியமாக செவ்வாய்க் கிரகத்தில் மனிதன் சுவாசிக்கத் தேவையான ஆக்ஸிஜனை தயார் செய்ய முடியுமா என்கிற ஆராய்ச்சியை மேற்கொண்டார். இந்த ஆராய்ச்சியில் மிகப் பெரிய வெற்றியும் பெற்றார். ஆனால் அமெரிக்க அரசாங்கமோ திடீரென அந்த ஆராய்ச்சியை ஓரங்கட்டிவிட்டது. என்றாலும் தான் கஷ்டப்பட்டு கண்டுபிடித்த விஷயத்தை ஸ்ரீதர் அப்படியே விட்டுவிடவில்லை. அந்த ஆராய்ச்சியை அப்படியே ரிவர்ஸில் செய்து பார்த்தார் ஸ்ரீதர். அதாவது, ஏதோ ஒன்றிலிருந்து ஆக்ஸிஜனை உருவாக்கி வெளியே எடுப்பதற்குப் பதிலாக அதை ஒரு இயந்திரத்துக்குள் அனுப்பி, அதனோடு இயற்கையாகக் கிடைக்கும் எரிசக்தியை சேர்த்தால் என்ன நடக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தார். அட, என்ன ஆச்சரியம்! மின்சாரம் தயாராகி வெளியே வந்தது. இனி அவரவர்கள் அவரவருக்குத் தேவையான மின்சாரத்தை இந்த இயந்திரம் மூலம் தயார் செய்து கொள்ளலாம் என்கிற நிலையை ஸ்ரீதர் உருவாக்கி இருக்கிறார்.

தான் கண்டுபிடித்த இந்தத் தொழில் நுட்பத்தை அமெரிக்காவில் செய்து காட்டிய போது அத்தனை விஞ்ஞானிகளும் அதிசயித்துப் போனார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வர்த்தக ரீதியில் மின்சாரம் தயாரிக்க வேண்டுமெனில் அதற்கான இயந்திரங்களை உருவாக்க வேண்டும். இதற்கு பெரிய அளவில் பணம் வேண்டும். இப்படிப்பட்ட தொழில்நுட்பத்தைப் உருவாக்கும் பிஸினஸ் பிளான்களுக்கு வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனங்கள்தான் பணத்தை முதலீடு செய்யும். ஸ்ரீதருக்கும் அப்படி ஒருவர் கிடைத்தார். அவர் பெயர், ஜான் டூயர். சிலிக்கன் பள்ளத்தாக்கில் பிரபலமாக இருக்கும் மிகப் பெரிய வென்ச்சர் கேப்பிட்டல் நிறுவனமான கிளீனர் பெர்க்கின்ஸை சேர்ந்தவர் இந்த ஜான் டூயர். அமெரிக்காவில் மிகப் பெரும் வெற்றி கண்ட நெட்ஸ்கேப், அமேசான், கூகுள் போன்ற நிறுவனங்கள் இன்று பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கக் காரணம், ஜான் டூயர் ஆரம்பத்தில் போட்ட முதலீடுதான்.

கூகுள் நிறுவனத்தை ஆரம்பிக்க ஜான் டூயர் தொடக்கத்தில் போட்ட முதலீடு வெறும் 25 மில்லியன் டாலர்தான். ஆனால், ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை வர்த்தக ரீதியில் செயல்படுத்த ஜான் டூயர் போட்ட முதலீடு 100 மில்லியன் டாலர். இது மிகப் பெரும் தொகை. என்றாலும் துணிந்து முதலீடு செய்தார் ஜான். காரணம், ஸ்ரீதர் கண்டுபிடித்த தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உகந்தது. பொதுவாக மின் உற்பத்தி செய்யும்போது சுற்றுச்சூழல் பிரச்னைகள் நிறையவே எழும். அது நீர் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி, அனல் மின் உற்பத்தியாக இருந்தாலும் சரி. எனவே சுற்றுச்சூழலுக்கு எந்த வகையிலும் பங்கம் வராத மின் உற்பத்தித் தொழில்நுட்பத்துக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும் என்று நினைத்தார் அவர்.

தவிர, ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தைக் கொண்டு குறைவான செலவில் மின்சாரம் தயார் செய்ய முடியும். இந்த பாக்ஸிலிருந்து உருவாகும் மின்சாரம் குறைந்த தூரத்திலேயே பயன்படுவதால் மின் இழப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. இது மாதிரி பல நல்ல விஷயங்கள் ஸ்ரீதரின் கண்டுபிடிப்பில் இருப்பதை உணர்ந்ததால் அவர் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தார். நல்லவேளையாக, ஜான் டூயரின் எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் கஷ்டப்பட்டு பலரும் உழைத்ததன் விளைவு இன்று ‘ப்ளூம் பாக்ஸ்’ என்கிற மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை தயார் செய்துள்ளார்.

சுமார் 10 முதல் 12 அடி உயரமுள்ள இரும்புப் பெட்டிதான் ஸ்ரீதர் உருவாக்கியுள்ள இயந்திரம். இதற்கு உள்ளே ஆக்ஸிஜனையும் இயற்கை எரிவாயுவையும் செலுத்தினால் அடுத்த நிமிடம் உங்களுக்குத் தேவையான மின்சாரம் தயார். இயற்கை எரிவாயுவுக்குப் பதிலாக மாட்டுச்சாண வாயுவையும் செலுத்தலாம். அல்லது சூரிய ஒளியைக் கூட பயன்படுத்தலாமாம். இந்த பாக்ஸ்களை கட்டடத்துக்குள்ளும் வைத்துக் கொள்ளலாம். வெட்ட வெளியிலும் வைத்துக் கொள்ளலாம் என்பது சிறப்பான விஷயம்.

”உலகம் முழுக்க 2.5 பில்லியன் மக்கள் மின் இணைப்புப் பெறாமல் இருக்கிறார்கள். ஆப்பிரிக்காவில் ஏதோ ஒரு காட்டில் இருக்கும் கிராம மக்களுக்கு மின்சாரம் கொடுத்தால், அதனால் அரசாங்கத்துக்கு எந்த லாபமும் இல்லை என்பதால் அவர்கள் மின் இணைப்புக் கொடுப்பதில்லை. கிராமத்தை விட்டு வந்தால் மட்டுமே பொருளாதார ரீதியில் முன்னேற முடியும் என்கிற நிலை அந்த கிராம மக்களுக்கு. ஆனால் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ மட்டும் இருந்தால் உலகத்தின் எந்த மூலையிலும் மின்சாரம் தயார் செய்யலாம்” என்கிறார் ஸ்ரீதர். ஒரு ‘ப்ளூம் பாக்ஸ்’ உங்களிடம் இருந்தால் இரண்டு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். இதே பாக்ஸ் இந்தியாவில் இருந்தால் நான்கு முதல் ஆறு வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் கிடைத்துவிடும். அமெரிக்க வீடுகளில் அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுவதே அங்கு வீடுகளின் எண்ணிக்கை குறையக் காரணம்.

இன்றைய தேதியில் அமெரிக்காவின் 20 பெரிய நிறுவனங்கள் ஸ்ரீதரின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன. கூகுள் நிறுவனம்தான் முதன் முதலாக இந்தத் தொழில்நுட்பத்தை வாங்குவதற்கான கான்ட்ராக்ட்டில் கையெழுத்திட்டது. ‘ப்ளூம் பாக்ஸ்’ மூலம் கூகுள் உற்பத்தி செய்யும் 400 கிலோ வாட் மின்சாரமும் அதன் ஒரு பிரிவுக்கே சரியாகப் போகிறது. வால்மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் பாக்ஸை வாங்கி இருக்கிறது. இப்போது பெட்எக்ஸ், இபே , கோக்கோ கோலா, அடோப் சிஸ்டம், சான் பிரான்சிஸ்கோ ஏர்போர்ட் போன்ற பல நிறுவனங்களும் இந்த புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயார் செய்கின்றன.

100 கிலோ வாட் மின்சாரம் தயார் செய்யும் ஒரு பாக்ஸின் விலை 7 முதல் 8 லட்சம் டாலர்! அட, அவ்வளவு பணம் கொடுத்து வாங்க வேண்டுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இபே நிறுவனம் கடந்த ஆண்டு ஸ்ரீதரிடமிருந்து ஐந்து பாக்ஸ்களை வாங்கியது. தனக்குத் தேவையான 500 கிலோ வாட் மின்சாரத்தை இந்த பாக்ஸின் மூலமே தயார் செய்துவிடுகிறது. இந்த பாக்ஸ்களை வாங்கிய ஒன்பதே மாதத்துக்குள் 1 லட்சம் டாலர் வரை மின் கட்டணத்தை சேமித்திருக்கிறதாம் இபே!

”உடனே மூன்று ப்ளூம் பாக்ஸ்களை அனுப்பி வையுங்க’ என்று மட்டும் யாரும் கேட்டுவிடாதீர்கள். காரணம், இது எதிர்காலத் தொழில்நுட்பம். இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பல வீடுகளில் இந்த ‘ப்ளூம் பாக்ஸ்’ இருக்கும். சாதாரண மனிதர்களும் இந்த பாக்ஸை வாங்கி பயன்படுத்துகிற அளவுக்கு அதன் விலை 3,000 டாலருக்குள் இருக்கும்” என்கிறார் ஸ்ரீதர். அந்த அளவுக்கு விலை குறையுமா என்று கேட்டால், ஒரு காலத்தில் லட்சத்தில் விற்ற கம்ப்யூட்டர் இன்று ஆயிரங்களுக்குள் கிடைக்கிறதே என்கிறார்கள் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள். ஸ்ரீதரின் இந்த தொழில்நுட்பம் எதிர்காலத்தில் நிஜமாகும் பட்சத்தில் உலகம் முழுக்க மக்கள் அந்தத் தமிழரின் பெயரை உச்சரிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
Dinamalar 11/10/2010

Friday, October 8, 2010

உந்தன் சிந்தையிலேதான் பேதமடா

ஏமாற சொன்னதும் நானோ? என்மீது கோபம் தானோ?

Tuesday, October 5, 2010

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் பெயர் சொல்ல வேண்டும்...

Doctor -- வைத்யநாதன்
Dentist -- பல்லவன்
Lawyer -- கேசவன்
North Indian Lawyer -- பஞ்சாபகேசன்
Financier -- தனசேகரன்
Cardiologist -- இருதயராஜ்
Pediatrist -- குழந்தைசாமி
Psychiatrist -- மனோ
Sex Therapist -- காமதேவன்
Marriage Counselor -- கல்யாணசுந்தரம்
Ophthalmologist --கண்ணாயிரம்
ENT Specialist -- நீலகண்டன்
Diabetologist -- சக்கரபாணி
Nutritionist -- ஆரோக்யசாமி
Hypnotist -- சொக்கலிங்கம்
Mentalist -- புத்திசிகாமணி
Exorcist -- மாத்ருபூதம்
Magician -- மாயாண்டி
Builder -- செங்கல்வராயன்
Painter -- சித்திரகுப்தன்
Meteorologist -- கார்மேகம்
Agriculturist -- பச்சையப்பன்
Horticulturist -- புஷ்பவனம்
Landscaper -- பூமிநாதன்
Barber -- கொண்டையப்பன்
Beggar -- பிச்சை
Bartender -- மதுசூதன்
Alcoholic -- கள்ளபிரான்
Exhibitionist -- அம்பலவாணன்
Fiction writer -- நாவலன்
Makeup Man -- சிங்காரம்
Milk Man -- பால்  ராஜ்
Dairy Farmer -- பசுபதி
Dog Groomer -- நாயகன்
Snake Charmer -- நாகமூர்த்தி
Mountain Climber -- ஏழுமலை
Javelin Thrower -- வேலாயுதம்
Polevaulter -- தாண்டவராயன்
Weight Lifter -- பலராமன்
Sumo Wrestler -- குண்டு  ராவ்
Karate Expert -- கைலாசம்
Kick Boxer -- எதிராஜ்
Batsman -- தண்டியாப்பன்
Bowler -- பாலாஜி
Spin Bowler -- திருபதி
Female Spin Bowler -- திருபுர  சுந்தரி
Driver -- சாரதி
Attentive Driver -- பார்த்தசாரதி

தினமலரை வணங்குகிறேன்

என்திரன், என்திரன், என்திரன் என்று எங்கு பார்த்தாலும் என்திரப்பேச்சு.
இவர்களுக்கு நடுவில் இப்படி ஒரு அப்பாவி பத்திரிகைக்கை - தினமலர் .
ரஜனி நியூஸ் .. மூச்..
பாலிசின்ன இது பாலிசி
என்திரன் மேல் பத்தை போட்டு பல்லாயிரமாக்கும் பணத்திமிருக்கு நடுவே இப்படியும் ஒரு பத்திரிகை.
தினமலரே உன் அடி பணிந்து வணங்குகிறேன். வாழ்க உன் கொள்கை, வளர்க உன் தொண்டு.

Sunday, October 3, 2010

பசுமாடும் தென்னை மரமும்

சின்ன வயசில படிச்ச ஒரு கதை:
ஸ்கூல் வாத்தியார் சொன்னார், பசு மாடு, தென்ன மரம், இந்த ரெண்டு கட்டுடைய படிங்க. அதில ஒன்னு நாளைக்கு பரிச்சயல வரும் என்றார். பையன் தென்ன மரத்த பத்தி படிச்சுட்டு போனான். கேள்வி பசு மாட்ட பத்தி. யோசிச்சான் பையன். பின்னர் கட்டுரைய இப்படி எழுதினான்:
"எங்கள் கிராமத்தில் பசு மாட்டை தென்ன மரத்தில் கட்டுவார்கள். தென்ன மரம் மனிதனுக்கு மிகவும் உதவிஉஆக இருக்கிறது...." என்று தென்னை புராணம் எழுதினான்.
அதே மாதிரி எனக்கு இந்த படலை கேட்கும் பொது இந்த கதை நினவு வரும். "எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னை போலவே இருப்பான்.. நிங்களும் இந்தப்பாட்டை கேட்டு மகிழவும்..

Thursday, September 30, 2010

உயர்ந்த மனிதன்

ணக்கார வாலிபன் ராஜு, ஏழைப் பெண் பார்வதியை மணக்கிறான். ஆனால், அவன் தந்தையின் பரம்பரைக் கௌரவமும், திமிரும் அந்தத் தம்பதியைக் கொடூ ரமாகப் பிரிக்கின்றன. காதல் களத்தில் வீரனாகத் திரிந்த ராஜு, வாழ்க்கையில் கோழையாகி, மறுமணம் புரிந்துகொள்கிறான். ஆனாலும், முதல் மனைவியைப் பற்றியே எண்ணி எண்ணிக் குமைந்து மறுகுகிறான்.
இடையே விதி விளையாடி, அவன் முதல் மனைவியின் மகனே அவனிடம் வேலைக்காரனாகப் பணிபுரிய வருகிறான். இறுதியில் மகனும் தந்தையும் ஒன்று சேரு கின்றனர்.
சிவாஜியின் பாத்திர அமைப்பும், நடிப்பும் தனிச்சிறப்புப் பெற்று விளங்குகின்றன. வெறுப்பையும், அன்பையும் சேர்த்துக்காட்டி நடிக்க முடியுமா? சிவாஜியால் முடியும்! உதாரணத்திற்கு ஒன்று... "இந்தக் குடும்பம், எங்க குடும்பத்துக்கிட்டே இருபது வருஷமா அடிமையா இருக்காங்களாம்! பிளடிஃபூல்ஸ்!" என்று சுந்தர்ராஜனைத் திட்டும் காட்சி.
இயற்கையான நடிப்பு என்ற சொற்களெல்லாம் இனி சிவாஜிக் குப் போதாது போலும்! காரசார மான சாப்பாட்டை அவர் சாப் பிடும்போது, நம் கண்களிலும் கண்ணீர் வருகிறது.
சினிமாவில் வரும் இரண்டா வது மனைவி வில்லியாக இருப் பதும், கதாநாயகன் தனது இரண் டாவது மனைவியிடம் வெறுப்புடன் நடந்துகொள்வதும்தான் வழக்கம். இந்தப் படத்தில் அது மாறுபட்டு, இயற்கையாக இருக் கிறது. சிவாஜி-சௌகார் இருவ ரின் கதாபாத்திரங்களும் தனித் தன்மை கொண்டவை. கதையில் வரும் எல்லோருமே நல்லவர் களாக இருக்கிறார்கள். அதுவே ஒரு குறையோ?!
சௌகார் ஜானகி, இப்போது வரும் பல இள நடிகைகளைவிட அழகாகவும், இளமையாகவும் இருக்கிறார்.
நடிப்பில் இரண்டாவது பரிசுக்கு அசோகனும் சௌகார் ஜானகியும் போட்டி போடுகிறார்கள்.
நகைச்சுவைக் காட்சிகள் குறைவாக இருந்தாலும் நிறைவைத் தருகின்றன. "இங்கிலீஷில் சாயத்துக்கும் டை, சாவதற்கும் டை என்கிறார்களே!" என்று வி.கே.ராமசாமி அழகாக அலுத்துக் கொள்கிறார்.
'அந்த நாள் ஞாபம் நெஞ்சிலே' என்ற வசன கவிதை புதுமையாக இருந்ததும், ஏனோ ரசிக்கும்படி யாக இல்லை. பின்னணி சப்தம் அதிகமாக இருப்பதுதான் கார ணமோ?
உயர்ந்த மனிதன் உள்ளத்தைக் கவருகிறான்.
நன்றி விகடன் : 15 /12 /1968 

Monday, September 27, 2010

அருகில் மிக அருகில்...

என் தோட்ட மலர்கள் மிக அருகாமையில் எடுத்து வீடியோவாக கன்வெர்ட் செய்த பொது...

Sunday, September 26, 2010

கலைஞர் பொய்யரா?

கலைஞர் பொய்யரா?
ஆம். நான் சொல்லவில்லை. பெரியார் சொல்கிறார். இதோ:
தேர்தலில் நிற்காமல் தொண்டாற்றி வருவது ஏன்?
நான் 1925 இல் காங்கிரசை விட்டு வெளியே வந்தேன். வந்தது முதல் ஜாதி ஒழியவேண்டும். நம் மக்களிடையே இருக் கிற இழிவு, மானமற்ற தன்மை ஒழிய வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டு சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தேன்.
தேர்தலில் ஈடுபட்டால் மக்களிடையே உண்மையைக் கூற முடி யாது
. ஆகையால், தேர்தலுக்கு நிற்கக் கூடாது என்று கொள்கை வைத்துத் தொண்டாற்றி வருகின்றேன். தேர்தலில் ஈடுபடாத காரணத்தினால்தான் நான் உங்களைக் காட்டுமிராண்டிகளே என்று அழைத்து, உங்களின் இழிநிலையை எடுத்துக் கூற முடிகிறது. இப்படிக் கூறி விட்டு உங்களிடம் வந்து நான் ஓட்டுக் கேட்டால், நீங்கள் என்ன சொல்வீர்கள்.
அயோக்கியன்! எங்களை காட்டுமிராண்டி என்று சொல்லிவிட்டு வோட்டு வேறு கேட் கிறாயா? என்று திருப்பிக் கேட்பீர்களா? இல்லையா? அதோடு நான் உண்மையை உங்களிடம் சொல்ல முடியாது என்பதால் தேர்தலில் நிற்காமல் தொண்டாற்றி வருகின்றேன்.
(விடுதலை, 13.11.1968)

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!


ரூம் போட்டு யோசிச்சாலும் கண்டு பிடிக்கவே முடியாதுங்க இந்த விபத்து எப்படி ஆச்சுன்னு. நண்பர் ஒருவர் மாலை ஏழு மணி அளவில், திருநள்ளார் சனிஸ்வரன் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தார். தெரு விளக்கு ஏதும் இல்லை. முன்னால் கோயில் குட்டி யானை சென்று கொண்டிருந்தது. தெரியாமல் தலைவர் யானையின் காலை இடித்துவிட்டார். யானை பாவம் காரில் உட்கார்ந்து விட்டது. கார் அப்பளமாகியது!. நல்ல வேளை காரைத் தவிர எந்த சேதமும் ஏற்படவில்லை! அட போங்கப்பா விபத்து எப்படியெல்லாம் வருது- தாய் யானை சொல்லியிருக்குமோ!

Thursday, September 23, 2010

யந்திரனும் வாலிபனும்

உலகம்  சுற்றும்  வாலிபனும்  யந்திரனும்....

இரண்டிலுமே கதாநாயகன் மேல் மாடி காலி
இரண்டுமே science fiction கதைகள் (கதாநாயகன் இரண்டிலுமே scientist அதனால்தான்)
இரண்டுமே Big Budget படங்கள்.
வாலிபன் பஞ்ச் டயலாக்: அவங்க யாராட்சி யாராட்சி ன்றாங்க. நீங்க ஆராச்சி ஆராச்சி ன்றீங்க
இரண்டுமே ஒன் லைன் ஸ்டோரி: கதாநாயகன் கண்டு பிடிப்பதை கதாநாயகனே  அழிப்பது.
இரண்டுமே தொழில் நுட்பத்தின் டாப் கியர்கள்
இரண்டிலும் மக்கள் மனம் கவர்ந்த கதாநாயகர்கள்
வாலிபன் வெற்றி வாகை சூடினான் . யந்திரன்?
இரண்டின் ரசிகர்களும் பால் அபிஷேகம் செய்யும் பார்ட்டிகள்.
வாலிபன் பாடல்கள் என்றும் மனதில் நிற்பவை.

Friday, September 17, 2010

நாலு பேருக்கு நன்றி

4-4+4-4=0
4/4+4-4=1
4/4+ 4/4=2
4/4+ 4/√4=3
4/√4+4/√4=4
(4)(4-4)+4=5
4+(4+4)/4=6
4+4-(4/4)=7
4+4+(4-4)=8
4+4+(4/4)=9


Wednesday, September 15, 2010

பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே நறு மணம் உண்டா?

- முத்துராமனிடம்தான்  கேட்க வேண்டும்
- என்னய்யா இன்னமுமா  இந்தக்க் கேள்விக்கு விடை தெரியல?
- எத்தனை பெண்களுக்கு இயற்கையிலேயே கூந்தல் இருக்கு?
- பொற்காசைத்தான் தருமிக்கு கொடுத்தாச்சே இனிமே பதில் சொல்லி என்னே பயன்?
- சாரி பிரதர், ரெண்டு நாளா மூக்கு ஒன் வே traffic
- எனக்கில்லை எனக்கில்லை, வலையத்த்தில எல்லாரும் இந்த பதிவை பத்துட்டான்களே, எனக்கு இல்லவே இல்லை
- எங்க வீட்டு பொம்பளைக்கு உண்டு (பொய் சொன்னாத்த்தான் போஜனம் கிடைக்கும்)
- மக்கள் குறை தீர்க்கும் GOOGLE   ஆண்டவா, பரம்பொருளே  நீ தாண்டா பதில் சொல்லனும்.
- காதலிக்கு நிச்சயமா உண்டு.
- மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு.

Tuesday, September 14, 2010

கணினியின் 10 உபயோகங்கள்

- ஆபிசில் உங்களிடம் கணினி இருந்தால் ஏ.சி. கிடைக்கும்.
- உங்களிடம் தேங்கி உள்ள கோப்புகள் எத்தனை என்று மற்றவருக்கு தெரியாது
- கணினியுடன்  இணைய இணைப்பும் இருந்து விட்டால் கேட்கவே வேண்டாம். ஆடல் பாடல்களை கணினியில் கண்டு கொள்ளலாம், நண்பர்களுடன் சாட் செய்யலாம். உங்கள் பாஸ் எட்டிப் பார்க்கும் பொழுதெல்லாம் நீங்கள் உங்கள் சீட்டில்  இருப்பதால் உங்களுக்கு performance grading A +
- ஷேர் மார்க்கட்டில்  புகுந்து விளையாடலாம்.
- உங்களுக்கு வரும் முக்கிய பேப்பர்களை (உங்களுக்கு பிடிக்கதவைகளை  ) கணினி அடியில் தள்ளி விட்டு காணவில்லை என்று சோகம் காட்டலாம்.
- முக்கியமான ரிப்போர்ட் நீங்கள் தயார் செய்ய வில்லை ஆனால் பாஸ் கேட்கிறார். "Computer Crash " என்று அதன் மேல் பழி போடலாம்.
- உங்கள் அன்பு மனைவி அல்லது அன்புக்குரியவரின் புகைப்படத்தை screen saver ல் போட்டு வைக்கலாம்.
- பசங்களின் home work ஆபிஸ் கணினியில் போட்டு பசங்களுக்கு நல்ல மதிப்பெண் பெற்றுத்தரலாம்.
- வீட்டுக் கணக்கு (அதாங்க: பால், தயிர், மளிகை, இத்யாதி) போடா உபயோகமா இருக்கும்.

சுட்டான்... சுடுவேன்

சுட்டான்... சுடுவேன்
வலையத்தில் சூடான விவாதம் ஓடிக்கொன்டிடிருக்கிறது.. கமல் படங்கள் ஹாலிவுட்டிலிருந்து சுடப்பட்டவையா?
தமிழ் புராண படங்களைத்தவிர சுடாத படங்கள் என்று உண்டா? அப்படியிருக்க கமலை மட்டும் கை காட்டுவது நல்லதில்லை.
ஏசு நாதர் சொன்ன மாதிரி, இதுவரை சுடாத தயாரிப்பாளர் யாரவது கமல் மீதுது கல் எரியட்டும்..
எனக்குத் தெரிந்து கமல் மீது கல் விழ ஒரே காரணம்... அவர் ஒரு முன்னேறி வரும் பார்ப்பான்.